இரண்டாவது விண்ணப்பத்தை சனூசி சமர்ப்பித்துள்ளார்

ஷா அலாம், ஜூலை 22-

அரச நிந்தனை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கெடா மந்திரி பெசார் சனூசி நோர், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்வதற்கு சட்டத்துறை அலுவலகத்தில் இரண்டாவது பிரதிநிதித்துவ மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

சனூசிக்கு எதிராக வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு வந்த போது, சனூசி மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் ஆகக்கடைசியாக ஏற்பட்டுள்ள புதிய நிலவரம் தொடர்பில் வழக்கு விசாரணை நடத்தப்படுவதற்கு முன்னதாக, சட்டத்துறை தலைவரின் பதிலுக்கு சற்று காத்திருக்குமாறு சனூசி, நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

தம்முடைய விண்ணப்பத்தை பரிசீலனை செய்வதற்கு சட்டத்துறை தலைவருக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக சனூசி தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS