புத்ராஜெயா, ஜூலை 22
பிரபல மதுபான நிறுவனத்திடமிருதுந்து சீனப்பள்ளி, நிதி உதவியைப் பெற்றதாக கூறப்படுவது தொடர்பில் அந்தப் பள்ளியின் நிர்வாகத்தை கல்வி அமைச்சு விசாரணை செய்து வருகிறது.
சிப்பாங்கில் செயல்படும் அந்த சீனப்பள்ளி, மதுபானம் நிறுவனத்திடமிருந்து நிதி உதவிப் பெற்றதை கல்வி அமைச்சு கடுமையாக கருதுவதாக இன்று காலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் கீழ் செயல்படுகின்ற எந்தவொரு பள்ளியும் கல்வி அமைச்சினால் வெளியிடப்படுகின்ற வழிகாட்டலை பின்பற்றி செயல்பட வேண்டும். குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இதற்கு பொருந்தும்.
மாணவர்களின் நலன் சார்ந்த அம்சங்களை பாதிக்கக்கூடிய சூதாட்டம், சிகரெட், போதைப்பொருள் மற்றும் மதுபானம் தொடர்புடைய எந்தவொரு தரப்பினரிமிருந்து நிதி உதவி பெறுவதற்கு பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.