விராட் கோலியுடன் சண்டையா…? பிரஸ் மீட்டில் போட்டு உடைத்த கௌதம் கம்பீர்!

இந்தியா , ஜூலை 22-

Gautam Gambhir Virat Kohli: விராட் கோலிக்கும் தனக்குமான தனிப்பட்ட உறவு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பரபரப்பாக பேசி உள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய பின்னர், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதை தொடர்ந்து, இம்மாத இறுதியில் இலங்கைக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 

ஜூலை 27ஆம் தேதி தொடங்கி வரும் ஆக. 7ஆம் தேதி வரை மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளில் இந்தியா – இலங்கை அணி மோதுகின்றன. டி20 உலகக் கோப்பைக்கு பின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து, இந்த சுற்றுப்பயணம் அதிகம் கவனம் பெற்றது. அதுமட்டுமின்றி, அடுத்தாண்டு பிப்ரவரியில் சாம்பியன்ஸ் லீக் தொடரும் நடைபெறுவதால் ஓடிஐ தொடர் மீதும் எதிர்பார்ப்பு எழுந்தது. 

WATCH OUR LATEST NEWS