இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு 8.5 கோடி நிதி உதவி – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு!

பிரான்ஸ் , ஜூலை 22-

ஒலிம்பிக் 2024 தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உதவும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ரூ.8.5 கோடி நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது வரும் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தமாக 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து 10,714 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடுகின்றனர். ஆனால், இந்தியா சார்பில் வெறும் 16 போட்டிகளில் மட்டுமே 70 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களில் சந்தோஷ் தமிழரசன், சுபா வெங்கடேசன் (திருச்சி), வித்யா ராமராஜ் (கோயம்புத்தூர்), பிரவீன் சித்திரவேல், ராஜேஷ் ரமேஷ் ஆகிய தமிழக வீரர், வீராங்கனைகள் உள்பட 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS