இன்று தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும், யோகி பாபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர் என்பதை தாண்டி கதையின் நாயகனாகவும் நடித்து வரும் யோகி பாபு, தன்னுடைய கஷ்டங்களை தாண்டி ஜெயித்த பிரபலமாக அறியப்படுகிறார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி, சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்தவர் தான் யோகி பாபு.
ஆரம்ப காலத்தில், இவருடைய தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தவர்கள் பலர். ஆனால் இந்த தோற்றம் தான் இவருக்கு மிகப்பெரிய பிளாஸாக அமைந்தது. இன்று தான் நடிக்கும் படத்திற்கு 1 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். அதுவே நாள் கணக்கு என்றால் 1 நாளைக்கு ரூ.10 லட்சம் சம்பளமாக இவர் பெறுவதாக கூறப்படுகிறது.

மெல்ல மெல்ல… திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய போது தான், இவர்க்கு இயக்குனர் சுப்ரமணிய சிவா இயக்கத்தில், கடந்த 2009 ஆம் ஆண்டு, அமீர் நடிப்பில் வெளியான, ‘யோகி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டதை தொடர்ந்து, பின்னர் இந்த படத்தின் பெயரே இவரின் அடையாளமாக மாறி யோகி பாபு என அழைக்கப்பட்டார்.
அடுத்தடுத்து பல படங்களில், சிறிய காமெடி ரோல்களில் தலை காட்டி வந்த யோகி பாபுவுக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது ‘யாமிருக்க பயமேன்’ படத்தில் இவர் நடித்த ‘பண்ணி மூஞ்சி வாயா’ காமெடி. தனித்துவமான காமெடி மூலம் இயக்குனர்களை கவர்ந்த யோகி பாபு, பின்னர் அஜித், விஜய், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் காமெடி பண்ணும் அளவுக்கு வளர்ந்தார்.

இன்று யோகி பாபு நல்ல நிலையில் இருந்தாலும், ஒரு காலத்தில்… பல நாட்கள் சாப்பிட கூட கையில் காசு இல்லாமல், பட்டினியாக படுத்து தூங்கி இருக்கிறார். இதனை அவரே ஒரு பேட்டியிலும் கூறிஇருப்பார். யோகி பாபு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில் துணை இயக்குனராக பணியாற்றிய போது, அவரின் நண்பர்களுடன் தான் தங்கி இருந்தாலும். குறைந்த சம்பளமே இவருக்கு கொடுக்கப்பட்ட நிலையில், ஷூட்டிங் நாட்களில் ப்ரோடக்ஷனில் பசியாற்றி கொள்ளும் இவர்… சில நாட்களில் கையில் காசு இல்லாததால் பட்டினியில் கூட படுத்து தூங்கி உள்ளாராம்.

காமெடியை தாண்டி யோகி பாபுவின் உள்ளே இருந்த திறமையான நடிகரை வெளிப்படுத்திய திரைப்படம் ‘மண்டேலா’. பின்னர் பொம்மை நாயகி உள்ளிட்ட பல படங்களில் சிறந்த பர்ஃபாம்மர் என்பதை நிரூபித்தார். இவரை கதையின் நாயகனாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டாலும், வருடத்திற்கு ஹீரோவாக ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என தீர்மானித்து நடித்துள்ளார். அந்த வகையில் இவர் நடித்துள்ள ‘BOAT’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படமும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு இவர் நாடிபில், கஜானா, கோட், கங்குவா, அந்தகன், தி ராஜ சாப், மெடிக்கல் மிராக்கல் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. ஓய்வில்லாமல் நடித்து வரும் யோகி பாபுவின் தற்போதைய சொத்து மதிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவலில், 50 கோடி முதல் 70 கோடி வரை இவருக்கு சொத்துக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
சென்னையில் இவருக்கு சொந்தமாக பிரமாண்ட வீடு ஒன்று உள்ளது. இதை தவிர சமீபத்தில் புதிதாக வீடு ஒன்றையும் வாங்கினாராம். வீட்டில் 3 சொகுசு கார்கள் வைத்திருக்கும் யோகி பாபுவுக்கு சொந்த ஊரிலும் வீடு, நிலம் போன்றவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
