மூவார்,ஜூலை 22-
பதிமூன்று வயது சிறுமியிடம் பாலியல் வல்லுறவு புரிந்ததாக லாரி உதவியாளர் ஒருவர், மூவார், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
19 வயது முஹம்மது ஹபிசுல் ஹாசிக் ஜுல்கேப்லி என்ற அந்த ஆடவர், கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜோகூர், Pagoh-வில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.