டெமர்லோ, ஜூலை 22-
நாட்டில் மிக அருகிவரும் புலி இனமாக கருதப்படும் மலாயா புலிகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐந்து புலிகள் இறந்துள்ளன. இதில் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவங்களும் அடங்கும் என்று இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மின் நிக் அகமது தெரிவித்தார்.
தவிர, நெருக்கடி மிகுந்த பொருத்தமற்ற பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்ட ஒன்பது மலாயா புலிகள், பிடிக்கப்பட்டு, அவற்றை பராமரிப்பதற்கு இயற்கை சூழல் நிறைந்த வாழ்விடப் பகுதிகளில் விடப்பட்டுள்ளன.
எனினும் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு இல்லை என்றால் அந்த அரிய விலங்கினத்தை பாதுகாப்பது என்பது சாத்தியமற்றதாகி விடும் என்று நிக் நஸ்மின் குறிப்பிட்டார்.
மலாயாப் புலிகளின் வாழ்விடமான வனப்பகுதிகளை பராமரிப்பதில் மாநில அரசு உட்பட அனைத்து தரப்பினரின் அர்ப்பணிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
பகாங், தெங்கு மஹ்கோத்தா, தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா-வினால் தெமர்லோ, வன விலங்கு, தேசியப் பூங்கா பல்லுயிர் பாதுகாப்பு கழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான மலாயா புலிகள் தின கொண்டாட்ட நிகழ்வில் அமைச்சர் நிக் நஸ்மின் இதனை குறிப்பிட்டார்.