முன்னாள் குமாஸ்தாவிற்கு 20 நாள் சிறை

கோலாலம்பூர், ஜூலை 22-

கடந்த வாரம் தனது நிர்வாகத்திற்கு சொந்தமான 4 ஆயிரம் வெள்ளியை திருடிய குற்றத்திற்காக முன்னாள் பெண் குமாஸ்தாவிற்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 20 நாள் சிறைத் தண்டனை மற்றும் 2 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

37 வயது பமீலா லின் ஆல்பர்ட் மென்ட்ரி என்ற அந்த குமாஸ்தா, அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைத் தண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் S. மகேஸ்வரி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மாது கடந்த ஜுலை 16 ஆம் தேதி கோலாலம்பூர்,ஜாலான் சுல்தான் இஸ்மாயில் -லில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 4 ஆயிரத்து 129 வெள்ளி 60 காசை திருடியதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

தனது சொந்த உபயோகத்திற்காக பணத்தை களவாடிய அந்தப் பெண், ஹோட்டலின் பாதுகாப்பு அதிகாரி நடத்திய விசாரணையின் போது குற்றத்தை ஒப்பியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS