பத்து கஜா , ஜூலை 22-
பேரா, பத்து கஜா- வில் தன்னை விரும்புவதாக கூறி, பெண் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இடையூறு கொடுத்து வந்ததாக நம்பப்படும் 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரின் காதலை நிராகரித்ததைத் தொடர்ந்து அவர், சாலையோரத்திலும், வேலை இடத்திலும் தனக்கு இடையூறு கொடுத்து வந்ததாக பத்து காஜா, தாமன் பெம்பன்- னை சேர்ந்த அந்தப் பெண் இரண்டு போலீஸ் புகார்களை செய்துள்ளார்.
அந்த புகார்களை அடிப்படையாக கொண்டு, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் தாமன் காடிங்- கில் அந்நபர் கைது செய்யப்பட்டதாக பத்து காஜா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது நூர் ஏஹவான் முகமது தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், இன்னும் திருமணம் ஆகாதவர் என்றும் ஏற்கனவே அடிதடி சண்டை தொடர்பில் இரண்டு குற்றப்பதிவுகள் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி முகமது நூர் குறிப்பிட்டார்