ஷா ஆலாம், ஜூலை 23-
பழைய இரும்புக்கடை இயக்குநர் ஒருவர், ஆயுதம் ஏந்திய நபர்களால் மடக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை ஷா ஆலாம், செக்ஷன் 33 இல் ஒரு பள்ளியின் முன்புறம் சமிக்கை விளக்குப்பகுதியில் நிகழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய அந்த இரும்புக்கடை இயக்குநர் நேற்று பிற்பகல் 2.41 மணியளவில் ஷா ஆலாம் போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்துள்ளார் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்தார்.
PERODUA KEMBARA கார் பயணம் செய்த அந்த நபரை, மோட்டார் சைக்கிளிலில் வந்த இரண்டு நபர்கள் வழிமறித்த கொள்ளையிட்டுள்ளனர். இந்த கொள்ளை தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவராக பகிரப்பட்டு வருகிறது.