நாளை அமைச்சவையில் விளக்கம் அளிக்கப்படும்

செரம்பன், ஜூலை 23-

சீனப்பள்ளி ஒன்றின் வளர்ச்சித் திட்டத்திற்காக மதுபான நிறுவனமான பீர் கம்பெனி நிதி திரட்டி தந்த விவகாரம் தொடர்பில் நாளை அமைச்சரவைக்கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்று DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

பாஸ் கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் விளக்கம் அளிக்க தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தை சர்ச்சையாக்க வேண்டியதில்லை என்று அவர் மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS