எந்தவொரு அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை

ஷா ஆலம், ஜூலை 23-

வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் அரசியல் ஒத்துழைப்பு கொள்வது குறித்து பாஸ் கட்சியுடன் எந்தவொரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையிலும் அம்னோ ஈடுபட்டதில்லை என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் இவ்விவகாரம் தொடர்பாக பாஸ் கட்சியின் எந்தவொரு தலைவரையும் தாம் சந்தித்ததில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அப்படியொரு சந்திப்பு நடைபெற்று இருந்தாலும் அது எதிர்பாராத சந்திப்பாக இருந்து இருக்கலாமே தவிர அதிகாரத்துவ சந்திப்பாக இருந்து இருக்காது என்று துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS