கோலாலம்பூர், ஜூலை 23-
தமிழ், சீனப்பள்ளிகள் உட்பட கல்வி அமைச்சின் கீழ் செயல்படுகின்ற பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிமுறைகள் ஒரு போதும் தளர்த்தப்படாது, விலக்களிக்கப்படாது மற்றும் மறு ஆய்வு செய்யப்படாது என்று அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் இன்று திட்டவட்டாமக தெரிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு நிதி திரட்டுவது உட்பட நன்கொடை வழங்கப்படும் முறையில் கல்வி அமைச்சு நிர்ணியத்துள்ள அனைத்து வழிகாட்டலும் பின்பற்றப்பட வேண்டும். இதில் தாய்மொழிப்பள்ளிகளும் விதிவிலக்கு அல்ல என்று அமைச்சர் ஃபத்லினா சிடெக் குறிப்பிட்டார்.
சிப்பாங்கில் உள்ள சீனப்பள்ளி ஒன்றின் வளர்ச்சித் திட்டத்திற்கு மதுபான நிறுவனமான பீர் கம்பெனி ஒன்றின் மூலம் நிதி திட்டப்பட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஃபத்லினா சிடெக் இந்த நினைவுறுத்தலை விடுத்துள்ளார்.