ஈப்போ , ஜூலை 24 –
நாட்டில் ஊழலை துடைத்தொழிப்பதில், பள்ளி மாணவர்கள் முகவர்களாக அல்லது ஊழலை எதிர்க்கும் வீரர்களாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, ஊழல்களில் அவர்களும் அவர்களை சுற்றியுள்ளவர்களும் ஈடுபடாமல் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டுமென மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் – SPRM-மின் சமூக கல்வி பிரிவு இயக்குநர் நஸ்லி ரசித் சுலோங் வலியுறுத்தினார்.
உயர்நெறியை பாதிக்கக்கூடிய ஊழல்களால், நாட்டின் மேம்பாடு முடங்குவதோடு, நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுகின்றது. அதனை அடிவேறாக களைய, இளம் தலைமுறையினரிடமிருந்து ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என நஸ்லி கூறினார்.