பட்டர்வொர்த், ஜூலை 24-
பினாங்கு,பேராய்-யில், தொழிற்பேட்டை பகுதியில் இரும்புகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் இரும்புத் துகள் கலந்த காற்றுத்தூய்மைக் கேட்டால், தாங்கள் பாதிக்கப்படுவதாக, அருகாமையிலுள்ள குடியிருப்பாளர்களில் சிலர் புகாரளித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட இரும்புத் துகள்கள், தங்களது வீட்டை அசுத்தமாக்குவதுடன் சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என தாங்கள் ஐயுறுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பேராய் சட்டமன்ற உறுப்பினரும் மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் செயற்குழு தலைவருமான டத்தூஸ்ரீ எஸ் சுந்தர்ஜூ நேற்று சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டார்.
ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் பினாங்கு சுற்றுச்சூழல் துறைக்கு, அத்தொழிற்சாலை தரப்பு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட அவர், காற்றுத்தூய்மைக்கேட்டிற்கு அத்தொழிற்சாலையே காரணம் என்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.