பலி எண்ணிக்கை அதிகரிப்பு

காத்மாண்டு, ஜூலை 24-

நேபாளில் விமான விபத்து 18 பலி

நேபாள தலைநகர் Kathmandu-வில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் நிகழ்ந்தது.

தலைநகர் காத்மண்டுவில் உள்ள Tribhuvan அனைத்துலக விமான நிலையத்திலிருந்து 208 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நேபாளின் இரண்டாவது முக்கிய நகரான Pokhara- வை நோக்கி உயரே பறக்க தயாரான போது, அந்த விமானம் ஓடு பாதையிலிருந்து விலகி தீப்பிடித்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த விமானத்தில் இரண்டு விமானிகள், 17 டெக்னிஷன்கள் என மொத்தம் 19 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஐவர் கருகி மாண்டனர். மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். விமானி ஒருவர் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Bombardier CRJ- 200 ரகத்திலான அந்த சிறிய விமானம், நேபாளத்தின் Saurya Airlines-க்கு சொந்தமானது என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS