தைப்பிங், ஜூலை 24-
பதின்ம வயதுடைய இளைஞரை மோதி தள்ளி, விபத்து ஏற்படும் அளவிற்கு மிக ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியதாக மூன்று பிள்ளைகளுக்கு தாயரான குடும்ப மாதுவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் R. பிரபாகரன் முன்னிலையில் இன்று நிறுத்தப்பட்ட 39 வயது S. காந்தாவிற்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தார்.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் 3 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் பேரா,ஜாலான் தைப்பிங் – பாகன் செராய் சாலையில் தாம் செலுத்திய Proton Saga FL கார், 19 வயதுடைய இளைஞரை மோதித் தள்ளும் அளவிற்கு வாகனத்தை மிக அபாயகரமான செலுத்தியதாக காந்தா மீது குற்றச்சாட்ட கொண்டு வரப்பட்டது. .
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லாது 12 மாத சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் அந்த மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.