கோலாலம்பூர், ஜூலை 24-
மனித வள அமைச்சின் கீழ் செயல்படும் மனித வள மேம்பாட்டுக்கழகமான HRD Corp. பில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்து இருப்பதாக PAC எனப்படும் பொது கணக்குக்குழுவினால் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் தலைமை செயல்முறை அதிகாரி ஷாகுல் ஹமீத் ஷேக் தாவூத்,மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM – மின் முக்கிய சாட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
PAC- யின் விசாரணையின் போது முரணப்பட்ட சாட்சியங்கள் மற்றும் திறன் கடப்பிதழ் விவகாரத்தில் வாரிய இயக்குநர்களை தவறாக வழிநடத்தியது தொடர்பில் ஷாகுல் ஹமிட் பல்வேறு தரப்பினரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
ஷாகுல் ஹமிட் விவகாரத்தில் PAC-யிடம் சாட்சியம் அ ளித்த HRD Corp.பின் இயக்குநரும், நிதி அமைச்சின் பிரதிநிதியுமான ரோஸ்லி யாகூப் – பின் வாக்குமூலம் முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
HRD Corp. பின் திறன் கடப்பிதழ் திட்டத்தில், அந்த திட்டத்தை நிதி அமைச்சு அங்கீகரிக்கும் அளவிற்கு இயக்குநர் வாரியத்தை ஷாகுல் ஹமிட் தவறாக வழிநடத்தி, நம்ப வைத்துள்ளார் என்று PAC – யிடம் ரோஸ்லி வாக்குமூலம் அளித்து இருப்பது அம்பலமாகியுள்ளது.
தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணைக்கு HRD Corp. ஆளாகியதைத் தொடர்ந்து அதன் தலைமை செயல்முறை அதிகாரி என்ற முறையில் ஷாகுல் ஹமிட் தற்போது விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளார்