விஜயகுமாரின் மகள் அனிதா, தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து போர்ச்சுகலுக்கு வெக்கேஷன் சென்றபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின், முதல் மனைவி முத்து கன்னுவுக்கு பிறந்த இரண்டாவது மகளான அனிதா விஜயகுமார், கடந்த ஒரு வருடமாகவே சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனிக்கப்படும் ஒருவராக உள்ளார்.

இதுவரை இவர் ஒரு படங்களில் கூட நடிக்கவில்லை என்றாலும், இவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.
மருத்துவரான அனிதா விஜயகுமார், திருமணத்திற்கு பின்னர் கணவருடன் சேர்ந்து வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவரின் இரண்டு மகன் மற்றும் மகள் இருவருமே படித்தது, வளர்ந்தது எல்லாம் வெளிநாட்டில் தான்.

அவ்வப்போது வெகேஷனுக்கு மட்டுமே வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவதை வழக்கமாக வைத்திருந்த இவர், தற்போது தன்னுடைய 50 வயதை எட்டிய பின்னர்… டாக்டர் பணியில் இருந்து ஓய்வு எடுத்து கொண்டு, தன்னுடைய வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார்.
50 வயதில் இவர் தன்னுடைய உடலை செம்ம பிட்னசாக வைத்திருப்பது தான்… தன்னால் பல்வேறு இடங்களுக்கு செல்ல, உத்தரவுகிறது என்பதையும் இவரே வீடியோ ஒன்றிலும் தெரிவித்தார்.