கிள்ளான் ,ஜூலை 24-
கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் சுத்திகரிப்பு மையங்களின் செயல்பாட்டை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் அளவிற்கு நீர் மாசுப்பாட்டிற்கு காரணமான இரண்டு நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்..
7 மாவட்டங்களில் நேற்று முதல் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அளவிற்கு துர்நாற்றம் மற்றும் இரசாயன கசிவிற்கு காரணமான தொழிற்சாலை கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் இரண்டு பொறுப்பாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் இலாகாவின் தலைமை இயக்குநர் வான் அப்துல் லத்தீப் வான் ஜாபர் தெரித்தார்.
நீர்மாசுப்பாடு சுங்கை குண்டாங் மற்றும் சுங்கை செம்பா-வில் ஏற்பட்டதன் காரணாக நான்கு நீர் சுத்திரிகப்பு மையயங்களின் செயல்பாடு நிறுத்தப்பட்டன.
இதனால், பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலாம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோலசிலாங்கூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.