தேமெர்லோ, ஜூலை 24-
மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், விபத்தொன்றில் லோரியின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்தார். இவ்விபத்து இன்று பிற்பகல் 1.55 மணியளவில் பகாங், தெமர்லோ, கம்போங் புக்கிட் கெலுலுட் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி, லோரியில் முன்புறம் மோதி அதன் அடியில் சிக்கினார். படுகாயத்திற்கு ஆளாகிய அந்த நபரை மீட்பதற்கு போலீசார் தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவி நாடினர். .
மீட்கப்பட்ட அந்த நபர், பின்னர் சுகாதார துறையின் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் தெமர்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பகாங் மாநில தீயணைப்பு,மீட்புப்படையின் மாநல பொது உறவு அதிகாரி சுல்ஃபாதில் ஜக்காரியா தெரிவித்தார்.