கோலசிலாங்கூர், ஜூலை 24-
கடந்த ஜுலை 19 ஆம் தேதி, கோலசிலாங்கூர், ஜெராம் வட்டாரத்தில் ஒரு வீடமைப்புப்பகுதியிலிருந்து இரண்டு சிறுமிகளை கடத்திச் சென்றதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதுடைய அந்நபர், நாளை வியாழக்கிழமை கோலசிலாங்கூர், சுங்கை பெசார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் உசேன் ஒமர் கான் தெரிவித்தார்.
பிசாங் கோரெங் – வியாபாரியான அந்த நபர், கடந்த ஜுலை 21 ஆம் தேதி அதிகாலை 2.40 மணியளவில்ஜெரன், ஜாலான் பவாங் ஜலீல் என்ற இடத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தங்கள் வீடமைப்புப்பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த அந்த இரண்டு சிறுமிகள், Perodua Bezza காரின் மூலம் சம்பந்தப்பட்ட நபரால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் அவ்விரு சிறுமிகள் காணாதது குறித்து பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட துரித தேடல் நடவடிக்கையில் அந்த சிறுமிகளும் பக்கத்தில் உள்ள ஒரு தாமானில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.