புத்ராஜெயா, ஜூலை 25-
அம்னோ – பாஸ் கட்சிகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுவதை மறுப்பதற்கில்லை.
இருப்பினும், அம்னோவின் தலைவர்டத்தூ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி-யின் தலைமைத்துவத்தை விரும்பாதவர்களே, பாஸ் கட்சியுடன் அச்சந்திப்பை நடத்தியிருக்கக்கூடும் என தாம் கருதுவதாக டிஏபி கட்சியின் துணை பொதுச்செயலாளர் தேங்கு சூல்புரி ஷா ராஜா பூஜி புயல் தெரிவித்தார்.
பேரிக்காதான் நசியனால்-லில் உள்ள கட்சிகள் மீது பாஸ் நம்பிக்கை இழந்துள்ளது கூட்டணியிலுள்ள பெர்சத்து , கெராக்கன் ஆகிய கட்சிகள் மீது,பாஸ் கட்சி நம்பிக்கையை இழந்துவிட்டதால், அக்கட்சி அம்னோவை நாடி வந்திருக்கலாம்.
இதற்கு முந்தைய ஒத்துழைப்புகளில் அம்னோவுக்கே பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை Tras சட்டமன்ற உறுப்பினருமான தேங்கு சூல்புரி ஷா சுட்டிக்காட்டினார்.