கோலாலம்பூர், ஜூலை 25-
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் 7 வட்டாரங்களில் ஏற்பட்டிருந்த அட்டவணையிடப்படாத நீர் விநியோக தடை, இன்று காலை மணி 7.30 வரைக்குமான நிலவரத்தின்படி 83.5 விழுக்காடு வரையில், சீரடைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களின் தூரம், நீர் அழுத்தம் ஆகியவற்றை பொறுத்தே, நீர் விநியோக சீரடைவதற்காக கால வரையறை 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், முதல் குழுவில் நீர் விநியோகம் முழுமையாக சீரடைந்துள்ள நிலையில், இரண்டாம் குழுவில் இன்றிரவு மணி 8 அளவில் நீர் விநியோகம் சீரடையும்.
மூன்றாம் குழுவிலுள்ள இடங்களுக்கு நாளை காலை மணி 8 அளவில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் என
சிலாங்கூர் நீர் நிர்வகிப்பு நிறுவனம் – AIR SELANGOR, அறிக்கையில் கூறியுள்ளது.