தெலுக் இந்தான் , ஜூலை 26-
340 ஆயிரத்து ரிங்கிட் மதிப்புள்ள 10.61கிலோகிராம் எடைக்கொண்ட methamphetamine வகை போதைப்பொருள்களை விநியோகித்த குற்றத்திற்காக, இரு இந்தோனேசிய மீனவர்கள் இன்று, பேராக், தெலுக் இந்தான் , செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இருப்பினும், குற்றம் சுமத்தப்பட்ட 48 வயது ஜஸ்லி மற்றும் 42 வயது புடி ஹெரியன்ஸ்யா ஆகிய இருவரிடமிருந்தும் நீதிமன்றத்தில் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஜூலை15-ஆம் தேதி, இரவு 10 மணியளவில், Bagan Datuk மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றுக்கு அருகிலுள்ள சுங்கை தியாங், கம்போங் பாகன் மீனவப் படகு துறையில் போதைப்பொருள்களை விநியோகித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், அந்த வழக்கின் மறுசெவிமடுப்பு செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.