சிலாங்கூர் , ஜூலை 26
சிலாங்கூர் மாநிலத்தில் நீர் மாசுப்பாடு காரணமாக நீர் விநியொகச் செவையில் இடையூறு ஏற்பட்ட சம்பவங்களை ஆராய சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று SPAN எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் அறிவித்துள்ளது .
நீர் மாசுப்பாட்டின் காரணமாக நீர் விநியோகத் தடை தொடர்பில் தேவையான தகவல்களை திரட்டும் பணியை SPAN மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது .
இவ்வாரம் முற்பகுதியில் சிலாங்கூர் , குடாங் ஆற்றில் நீர் மாசுப்பாடு காரணமாக நீர் சுத்தகரிப்பு மையம் நிறுத்தப்பட்டதல் கிள்ளன் , பெட்டலிங் ஜெயா உட்பட 7 மாவட்டங்களில் நீர் விநியோகத்தடை எற்பட்டது.