ஹுலு சிலாங்கூர், ஜூலை 26-
உப்சி எனப்படும் தஞ்சங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழக்கத்தின் முன்னாள் மாணவி நூர் ஃபரா கார்த்தினி அப்துல்லா-வை கொலை செய்ததாக போலீஸ்காரர் ஒருவர் ,கோலா குபு பஹாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ் சட்டப்பட்டார்.
பெராக் ஸ்லிம் ரிவேர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றியவரான 26 வயது லான்ஸ் கோபரல் முகமது அலிஃப் மோஜனி என்ற அந்த போலீஸ்காரர் , 25 வயது நூர் ஃபரா கார்த்தினி –யை கொலை செய்து சடலத்தை ஹுலு சிலாங்கூர் , ஹுலு பெர்னாம், எஸ்கேசி கிளெடாங் செம்பனைத் தோட்டத்தில் வீசியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அந்த போலீஸ்காரர், கடந்த 10 ஆம் தேதிக்கும் ஜூலை 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இக்குற்றத்தை புரிந்தாக நீதிமன்றத்தில் தேரிவிக்கபட்டது.
நீதிபதி நூருல் மர்தியா முகமது ரெட்சா முன்னிலையில் நிறுத்தப்பட்ட போலீஸ்காரர் முஹம்மது அலிஃப் குற்றவாளி என்று நிருபிக்கபட்டால் மரணத்தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றச் சாட்டை எதிர்நோக்கியுள்ளார் .
இக்கொலை வழக்கு ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்த போலீஸ்காரிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை .