ஜொகூர், ஜூலை 26-
6 வயது சிறுமி ஆல்பர்டின் லியோ ஜியா ஹுய், கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகப்பேர்வழிகள் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த நால்வருக்கு எதிரான தடுப்புக் காவலை தொடர்வதில்லை என்று போலீஸ்சார் முடிவு எடுத்துள்ளதாக ஜோகூர் இஸ்கந்தர் புத்தேரி மாவட்ட போலீஸ் தலைவர் ACP M.குமரன் தெரிவித்தார்.
28-க்கும் 55-க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழிகளின் தடுப்புக் காவல் இன்றுடன் முடிவடைந்து விட்டதாகன ACP குமரன் குறிப்பிட்டார்
கடந்த சனிக்கிழமை ஜோகூர் ,இஸ்கந்தர் புத்தேரி-யில் உள்ள ECO AALLERIA –வில் கடத்தப்பட்ட அந்த 6 வயது சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.