ரவுப், ஜூலை 26-
சீரோ, ரவுப் வட்டார இந்திய கலைக் கலாச்சார இயக்கம், எதிர்வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வியாழக்கிழமை ஜூப்லி பேரா மண்டபத்தில் தீபாவளி கலை இரவு 2024 நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
சிறப்பு பிரமுகராக மண்ணின் மைந்தர் லோக்காப், அவர் தம் குழுவினருடன் இந்த கலை விழாவில் இணையவுள்ளார்.
ஆடல், பாடல் மட்டுமின்றி சிறப்பு அங்கமாக மிக பிரமாண்டமான பரிசுகளுடன் அதிர்ஷ்ட குலுக்கலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பற்றுச்சீட்டு 2 வெள்ளி வீதம், ஒரு பற்றுச்சீட்டு புத்தகம் 20 வெள்ளிக்கு விற்பனையில் உள்ளது.
முதல் பரிசு மோட்டார் வண்டி, / இரண்டாம் பரிசு : 50 அங்குலம் திறன் தொலைக்காட்சி, மூன்றாம் பரிசு : வீவோ திறன்பேசி மற்றும் தொடர்ந்து 30 விதமான தரமான பரிசுகள் ஏற்பாடுகள் செய்யப்பபட்டுள்ளன. நீண்ட நாட்களுக்குப் பின், நடைப்பெறவுள்ள தீபாவளி கலை இரவில், ரவுப் வாழ் மக்கள் அனைவரும் கலந்து ஆதவு தரும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
தொடர்புக்கு :
Screen.
திரு. மகேந்திரன் (013-9552818)
திரு. தர்மராஜா (010-9609312)
திரு. மனோகரன் (018-7602292)