இரண்டு இந்திய ஆடவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்

போர்ட் டிக்சன், ஜூலை 26-

சட்டவிரோத வட்டி முதலைகளுக்கு உதவும் வகையில் அவர்களின் வியாபாரம் தொடர்புடைய விளம்பரப் பேனர்களை கட்டியதற்காக இரண்டு இந்திய ஆடவர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

மாஜிஸ்திரேட் உத்தமன் அப்துல் கனி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 25 வயது R. லோகேஸ்வரன் மற்றும் 22 வயது V. ராஜசிங்கம் என்ற அவ்விரு இளைஞர்களும் கடந்த ஜுலை 18 ஆம் தேதி பிற்பகல் 2.40 மணியளவில் போர்ட்டிக்சன், பெக்கன் லுகுட், ஜாலான் பசார்- ரில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை லோகேஸ்வரனும், ராஜசிங்கமும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு தலா மூவாயிரம் வெள்ளி அபராதம் விதிப்பதாக மாஜிஸ்திரேட் உத்தமன்அப்துல் கனி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS