அன்வாரின் தம்புன் தொகுதியில் நாளை சனிக்கிழமை எதிர்ப்பு பேரணியா? / நடப்பு நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை / போலீஸ் கூறுகிறது

ஈப்போ , ஜூலை 26-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சொந்த நாடாளுமன்றத் தொகுதியான பேரா, தம்புன்- னில் நாளை சனிக்கிழமை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் எதிர்ப்பு பேரணி, / 2012 ஆம் ஆண்டு பொது அமைதிப் பேரணி சட்டத்தின் நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என்று போலீசார் கூறுகின்றனர்.

ஹிம்புனன் மஹ்கமஹ் ரக்யாட் ஹுகும் அன்வர் என்ற இந்த எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படும் தரப்பினர் இது குறித்து கடந்த புதன்கிழமை தங்களிடம் தெரியப்படுத்தியுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஜைனல் அபிதீன் அஹ்மத் குறிப்பிட்டார்.

அவர்களின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்ததில் அது 2012 ஆம் ஆண்டு பொது அமைதி சட்டத்தின் கீழ் உள்ள நிபந்தனைகளை பின்பற்றுவதாக இல்லை என்று அவர் விளக்கினார்.

இதன் தொடர்பில் அந்த சட்டவிரோதப் பேரணியில் பொது மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்துவதாக அபாங் ஜைனல் குறிப்பிட்டார்.

அதேவேளையில் இந்தப் பேரணியில் பங்கேற்கின்றளவர்கள் மற்றும் பேரணி நடத்துவதற்கு தங்கள் நிலப்பகுதியை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கின்றவர்களுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கையை மேற்கொள்வர் என்று அபாங் ஜைனல் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS