கோலாலம்பூர், ஜூலை 26-
பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கப்படும் விவகாரத்தில் கல்வி அமைச்சு நிர்ணியத்துள்ள வழிகாட்டல்கள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. .
மதுபான விற்பனை நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவது மற்றும் மதுபான நிறுவனங்களின் விளம்பரங்களை பள்ளி நிகழ்வுகளில் காட்சிக்கு வைப்பது போன்றவை தடை செய்யப்படும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் தமிழ் மற்றும் சீன தாய்மொழிப்பள்ளிகளுக்கு LPS எனப்படும் பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் கல்வி அறவாரியங்கள் உதவிடும் முந்தைய அமலாக்க முறைகள் தொடரப்படுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சு குறிபிட்டுள்ளது.