சர்ச்சையை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்

ஜூலை 28-

பெர்சத்துக் கட்சியின் தகவல் தொடர்பாளர் Chegubard என்றழைக்கப்படும் Badrul Hisham Shaharin இன்று 3 மணியளவில் கைதாகி உள்ளார். கடந்த ஜூலை 22 ஆம் நாள் அன்று, ராணுவ உயர் அதிகாரி ஒருவர் லஞ்ச ஊழலில் ஈடுப்பட்டதாக கூறி, ரகசிய கோப்பை ஒன்றை தனது முகநூலில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் குறுகிய காலத்தில், பதவி ஓய்வு பெற உள்ள மலேசிய கடற்படை Panglima Abdul Rahman க்கு பதிலாக பொறுப்பற்ற, லஞ்ச ஊழலில் ஈடுப்பட்டிருக்கும் ஒரு அதிகாரியை நியமனம் செய்வதில் நியாயமில்லை என்ற அடிப்படையில் Chegubard அந்த ரகசிய கோப்பில் உள்ள விவரங்களை வெளியிட்டதாக கூறி உள்ளார்.

எனினும், மேல் விசாரணைக்காக Chegubard நாளை புத்ராஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு அவரின் விசாரணை காலம் நீடிக்கப்படும் என மஜிஸ்திரேட் Rafique தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS