200 இந்திய மாணவர்கள் பயிற்சி திட்டத்திற்காக சீனா செல்கின்றனர்

கோலாலம்பூர்,ஜூலை 28-

(TVET) எனப்படும் teknikal மற்றும் vokasional பயிற்சிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கம் 200 இந்திய மாணவர்களை சீனாவிற்கு அனுப்பவிருப்பதாக அதன் தலைவரும் நாட்டின் துணை பிரதமருமான Datuk Seri Dr Ahmad Zahid அறிவித்திருக்கின்றார்.


முதல் கட்ட பயிற்சியை மேற்கொண்ட மலேசிய மாணவர்களின் அடைவைக் கண்ட பிறகே, தான் 200 இந்திய மாணவர்களை சீனாவிற்கு இலவமாக பயிற்சியை மேற்கொள்ள அனுப்பவிருப்பதாக அவர் மேலும் கூறினார்.


இந்திய சமுதாயத்தின் இளையோர் சந்தித்து வரும் பிரச்சனைகளை தான் அறிந்து வருவதால்தான், இந்த வாய்ப்பை 200 இந்திய மாணவர்களுக்கு தான் வழங்கி உள்ளதாக நேற்று தேசிய வகை தமிழ்ப்பள்ளி Parlimen Bagan Datuk , Dato’ Mohamed Jamrah மண்டபத்தில் மாணவர்களுக்காக பள்ளி உதவிதொகை வழங்கும் நிகழ்வில் சாயிட் இவ்வாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS