பழமைவாத கூட்டணியாக பேரிக்காதான் நசியனால் பார்க்கப்படும்!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 29

சீனப்பள்ளிக்கு மதுபான நிறுவனம் நிதியளித்துள்ள விவகாரத்தை தற்காத்து பேசியுள்ள கெராகன் கட்சியுடன், அடுத்த பொதுத்தேர்தலில் கூட்டணியை அமைத்துக்கொள்ள முடியாமல் போகலாம் என பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபாத்லி ஷார் எச்சரிக்கை விடுத்துள்ள விவகாரம்.

அவரது அக்கூற்று,பேரிக்காதான் நசியனால் -ல்லை மிகவும் பழமைவாதம் மிக்கதாக அல்லது வலதுசாரி கூட்டணியாக அடையாளப்படுத்திவிடும் என மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் இணைப்பேராசிரியர் லாவ் ழே வெய் தெரிவித்தார்.

மலேசிய அரசியல் சூழலில், பழமைவாதம் அல்லது வலது சாரி நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அரசியல் கூட்டணி நீண்டக்காலம் தாக்குப்பிடிக்க முடியாது.

மேலும், பல்லின மக்களை பிரதிநிதிக்கும் கூட்டணியாக காட்டிக்கொள்ளவும் மலாய் அல்லாத வாக்காளர்களைக் கவரவும், பேரிக்காதான் நசியனால் -லுக்கு கெராகன் கட்சியின் ஆதரவு தேவைப்படுவதை, லாவ் ழே வெய் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS