ஈப்போ , ஜூலை 29-
வங்காள தேசத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக தாயத்திற்கு அழைத்துவரப்பட்ட மலேசிய மாணவர்கள், அந்நாட்டில் அமைதியான சூழல் ஏற்பட்ட பிறகு, அங்கு படிப்பை தொடரவும் அல்லது உள்நாட்டில் படிப்பைத் தொடரவும் வாய்ப்பளிக்கப்படும்.
அவ்விவகாரம் தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைப்பாடுகளைக் கண்டறிய, அவர்களுடன் மேல்கட்ட பேச்சுகளை நடத்தும்படி, தமது தரப்புக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக, உயர்க்கல்வி அமைச்சர் டதுக் ஸ்ரீ ஜாம்பிரி ஏபிடி கதிர் தெரிவித்தார்.
உள்நாட்டில் கல்வியைத் தொடருவதாக இருந்தால், அம்மாணவர்களின் கல்வி தகுதி, அவர்கள் தேர்வு செய்துள்ள துறைகள் முதலானவற்றைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவது குறித்து ஆராயப்படும் எனவும் ஜாம்பிரி கூறினார்.