5ஜி விலை நிலை நிலைறுத்தப்படும்

கோலாலம்பூர், ஜூலை 29-

இரண்டாவது அலைவரிசையின் கீழ் 5G சேவைக்கான கட்டணம், நடப்பு கட்டண விகிததத்துடன் நிலைநிறுத்தப்படுவதை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் வாயிலாக அரசாங்கம் உறுதி செய்யும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.

5G அலைவரிசை அமலாக்க மதிப்பீட்டு நடைமுறையின் போது கருத்தில் கொள்ளப்பட்ட அம்சங்களில் விலையும் ஒன்றாகும் என்று அவர் கூறினா

இவ்விவகாரத்தில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் அதீத அக்கறை கொண்டுள்ளது. இரண்டாவது அலைவரிசை உருவாக்கப்படும் போது, நிர்ணயிக்கப்படக்கூடிய விலை, நடப்பு விலைப்படி கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை தாங்கள் எடுத்துள்ளதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.

மலேசியாவில் 5G அலைவரிசையின் இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக Digital Nasional Berhad மற்றும் Cybersecurity Malaysia ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மீதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடம் நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோபிந்த் சிங் இதனை குறிப்பிட்டார்.

இந்த ஒத்துழைப்பானது, 5G பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்குவதை உள்ளடக்கியள்ளது என்பதுடன் இது தொழில்துறை தேவைகளுக்கான அடிப்படையாகவும், எதிர்கால 5G பாதுகாப்பை வழிகாட்டுதல்களுக்கான ஒரு வழிகாட்டியாகவும் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS