கோலாலம்பூர், ஜூலை 29
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமாக மர்மமான முறையில் உயிரிழந்தாக கூறப்படும் காஜாங் சிறைக் கைதி 25 வயது ரூபன் கருணாகரன் சம்பந்தப்பட்ட மரண விசாரணை தீர்ப்பை மரண விசாரணை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மரண விசாரணை நீதிமன்றம், / இன்னமும் ஆதாரங்கள் மீதான பரிசீலனையை செய்து வருகின்ற காரணத்தினால் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ரூபன் குடும்பத்தினரின் வழக்கறிஞர் டி. சசி தேவா தெரிவித்தார்.
தீர்ப்புக்கான தேதி விரைவில் நிர்ணயிக்கப்படும் என்று இன்று திங்கட்கிழமை ஷா ஆலாம், உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த 2023 ஆண்டில் 17 வயதாக இருக்கும் போது நிகழ்ந்த மூன்று கொலைகள் தொடர்பில் 2017 ஆம் ஆண்டில் பிடிபட்ட இரண்டு நபர்களில் ரூபனும் ஒருவர் ஆவார்.
தொடகக்த்தில் ரூபன் சந்தேகப் பேர்வழியாக கருதப்படுவில்லை. ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சம்பவ இடத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட ரூபனின் டிஎன்ஏ மரபணு மாதிரியைத் தொடர்ந்து பதின்ம வயதுடைய அந்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு ரூபனை உயர் நீதிமன்றம் குற்றவாளி என்று உறுதி செய்தது. இத்தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில் அவ்வழக்கு மீதான விசாரணை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் 19 ஆம் தேதி நடைபெறவிருந்தது.
இந்நிலையில் காஜாங் சிறையில் அடைத்துவைக்கப்பட்டு இருந்த ரூபன், மூச்சுத்திணறலுக்கு ஆளாகி காஜாங் மருத்துவமனையில் இரண்டு முறை அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் தேதி நள்ளிரவு ரூபன் மரணம் அடைந்தார்.
ரூபனின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் புதைந்திருப்பதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.