கிளந்தான், ஜூலை 29-
கிளந்தான், குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்றத் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் அரச மலேசிய கடற்படையின் முன்னாள் வீரர் முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் போட்டியிடவிருப்பதாக அக்கூட்டணி இன்று அறிவித்துள்ளது.
முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் – லின் பெயரை கிளந்தான் மாநில முன்னாள் மந்திரி பெசார் மோட் நசுருதீன் தாத் அறிவித்துள்ளார்.
குவா மூசாங் பாஸ் கட்சி இளைஞர் பிரவின் முன்னாள் துணைத் தலைவரான முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் தற்போது பெர்சத்து கட்சியின் உறுப்பினராக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.