குவா முசாங், ஜூலை 29-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் அவரின் புதல்வர் டத்தோ நசிபுடின் ஆகியோர் செலுத்தப்படாத வருமான வரியான முறையே 169 கோடி வெள்ளியையும், 3 கோடியே 76 லட்சம் வெள்ளியையும் கோருவதற்கு உள்நாட்டு வருமான வரி வாரியம் தொடங்கியுள்ள திவால் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதில் தந்தையும், மகனும் இன்று தோல்விக் கண்டனர்.
தங்களுக்கு எதிராக திவால் வழக்கு நடவடிக்கை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று நஜீப்பும் அவரின் மகனும் செய்து கொண்ட விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நஜீப் சம்பந்தப்பட்ட வருமான வரி தொடர்புடைய விவகாரம் இன்னமும் முழுமையாக தீர்க்கப்படாமல் இருக்கிறது. அவற்றுக்கு தீர்வு காணப்படும் வரையில் அவருக்கு எதிராக வருமான வரி வாரியம் மேற்கொள்ளவிருக்கும் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு உயர் நீதின்றம் அனுமதி அளிக்கக்கூடாது என்று தந்தையும் மகனும் தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்து இருந்தனர்.