எல்ஆர்டி மூன்றாவது திட்டம் அடுத்த ஆண்டில் பூர்த்தியாகும்

புத்ராஜெயா, ஜூலை 29-

சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான், ஜோஹன் செட்டியா- வையும், பெட்டாலிங் ஜெயா, பந்தர் உத்தமா -வையும் இணைக்கும் மூன்றாவது LRT- ரயில் திட்டத்தின் நிர்மாணிப்புப்பணி, அடுத்த ஆண்டு மூன்றாவது காலண்டில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 நிலையங்களை உள்ளடக்கிய அதன் கட்டுமானப்பணிகள் 95.6 விழுக்காடு பூர்த்தியாகிவிட்டது. வரும் அக்டோபர் மாதம் முழுமையாக பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

கட்டுமானப் பணிகள் பூர்த்தியானவுடன் தொடர்புமுறைகளுக்கான பணிகளுக்கு மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்று கிள்ளான், Pasar Jawa- வில் LRT 3 இன் கட்டுமானப் பணிகளின் ஆகக்கடைசி நிலவரங்களை நேரில் கண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் இதனை குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS