சிறார்களின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்

கோலாலம்பூர், ஜூலை 29-

சிறார்கள் காரை செலுத்திய காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அந்த சிறார்களின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இரண்டு நிமிட அந்த காணொளியில் வயது குறைந்த ஒரு பெண் உட்பட மூன்று சிறார்கள் அந்த Perodua Viva காரில் இருப்பது தெரியவந்துள்ளது.

பெரியவர்கள் துணையின்றி அந்த மூவரில் ஒருவர் காரை ஓட்டிச் செல்கின்றனர். . அவர்கள் எந்தப்பகுதியில் காரை ஓட்டி செல்லகின்றனர் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால், அது குறித்த போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS