ஈப்போ , ஜூலை 02-
பேராக், ஈப்போ-விலுள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில், முதலாம் படிவ மாணவரை கடுமையாக தாக்கி, உடலில் பல பகுதிகளில் காயங்களை விளைவித்த, 16 மற்றும் 17 வயதுடைய 5 ஆண் மாணவர்களைப் போலீஸ் விசாரணைக்காக கைது செய்துள்ளது.
இம்மாதம் 24ஆம் தேதி, பாதிக்கப்பட்ட மாணவர் வழங்கிய புகாரின் அடிப்படையில், அந்த 4ஆம் மற்றும் 5ஆம் படிவ மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட மாணவர் தாக்கப்பட்டதற்கான காரணமும் அதில், இதர மாணவர்களும் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்பது குறித்தும் குற்றவியல் சட்டம் செஷன்ஸ் 147-இன் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக,பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அஜிஜி மட் அரிஸ் தெரிவித்துள்ளார்.