ஜோகூர், ஜூலை 30-
ஜோகூர் பாரு, புக்கிட் திராம்-மிலுள்ள ஓர் உணவகத்தின் முன்பு, கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி, 13 வயதுடைய பையனை கடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, சமூக ஊடகங்களில் பரவலாகிவரும் செய்தியை, போலீஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தனது மகனை, அடையாளம் தெரியாத நபர், வெள்ளை நிற வேனில் கடத்த முயற்சித்ததாக, நேற்று முந்தினம், 49 வயதுடைய பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அது குறித்து விசாரித்ததில், வீட்டிற்கு தாமதமாக வந்தது குறித்து கேள்வியெழுப்பிய தாயிடம், சம்பந்தப்பட்ட பையன், தம்மை கடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, ஜோடிக்கப்பட்ட கதையை கூறியுள்ளது தெரிய வந்திருப்பதாக,செரி ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது சோஹைமி இஷாக் தெரிவித்தார்.