நாட்டை ஆண்ட அரசாங்கங்களிலேயே, மடானி அரசாங்கம், சர்வாதிகரமானது! டத்தோ அம்பிகா ஸ்ரீநேவாசன் சாடுகின்றார்

கோலாலம்பூர், ஜூலை 30-

மலேசிய அரசாங்கத்தை இதுநாள் வரையில் ஆட்சி புரிந்தவர்களிலேயே, நடப்பிலுள்ள மடானி அரசாங்கம்தான் அதிக சர்வாதிகரமானது என பெர்சி அமைப்பின் முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான டத்தோ அம்பிகா ஸ்ரீநேவாசன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பக்காத்தான் ஹாராப்பான் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில், கழக சீர்த்திருத்தங்களை வலியுறுத்திய சிவில் சமூகத்திற்கு தலைமையேற்றிருந்த அவர், தற்போது, சமூக ஊடக நடத்துனர்கள் கட்டாயம் உரிமத்தை பெற வேண்டுமென, அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

1984ஆம் ஆண்டு அச்சு ஊடகம் மற்றும் பதிப்பு சட்டம் உள்பட பல்வேறு சட்டங்களில் சீர்த்திருத்தம் செய்வதாக பக்காத்தான் ஹாராப்பான், இதற்கு முன்பு வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால் தற்போது, ஆட்சியில் உள்ள அக்கூட்டணி, வழங்கிய வாக்குறுதிக்கு எதிர்மாறாக நடந்துக்கொள்ளும் என தாம் ஒரு போதும் நினைத்திருக்கவில்லை என அம்பிகா அவரது X தள பதிவில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS