ஜோகூர், ஜூலை 30-
ஜோகூர், இஸ்கந்தர் புத்தேரி-யிலுள்ள பான் ஓடோரி விழா தளத்தில், இம்மாதம் 20ஆம் தேதி, 6 வயது சிறுமி ஆல்பர்டின் லியோ ஜியா ஹுய் கடத்தப்பட்டதற்கான காரணம் தற்போதைக்கு வெளியிடப்படாது என அம்மாநில போலீஸ் தலைவர் கோமிஷனர் எம்.குமார் தெரிவித்தார்.
காரணத்தை வெளியிட்டால், அது தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைக்கு இடையூறை ஏற்படுத்தலாம் என்றாரவர்.
சம்பந்தப்பட்ட சிறுமியைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறிய குமார், விசாரணை நிறைவு பெற்ற பின்னரே, அச்சிறுமி கடப்பட்டதற்கான காரணம் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படும் எனவும் கூறினார்.