கோலாலம்பூர், ஜூலை 30-
நடிகர் தனுஷ் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்போது அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்போது அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ், தற்போது தென்னிந்திய நடிகர் என்பதை தாண்டி பான் இந்திய நடிகராக வளர்ந்து விட்டார். ஹாலிவுட் அளவுக்கு வளர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, இந்தி என மாறி மாறி வெவ்வேறு மொழி படங்களின் நடித்து வருகிறார். தற்போது கோலிவுட் திரையுலகில் மிகவும் பிசியாக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். நேற்று முன்தினம் இவரது இயக்கத்தில் ராயன் படம் திரையரங்கில் வெளியானது. இந்த படத்தை இயக்கியதுடன் அவரே நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பால முரளி, செல்வராகவன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் வெளியாகி மூன்றே நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதுடன், படத்தை மக்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து தற்போது இவர் ரசிகர்களால் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். அடுத்ததாக இந்தி படம் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வரும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து அவர் நடித்திருக்கும் இன்னொரு இந்தி படம், ‘தேரே இஷ்கு மெயின்’. அதுமட்டுமின்றி இதற்கிடையில் தனுஷ் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எனும் படத்தை எழுதி இயக்குகிறார். இப்படி கைவசம் இத்தனை படங்களை வைத்துள்ள நடிகர் தனுஷுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அந்த அறிவிப்பில் நடிகர் தனுஷை வைத்து புதிய படங்களை இயக்குவதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கண்டிப்பாக கலந்துரையாடல் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் தற்போது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு எந்தப் புதிய தமிழ்ப் படங்களும் தொடங்கப்படாது என்றும் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடத்தப் படாது என்றும் தயாரிப்பில் உள்ள அனைத்துப் படங்களின் படப்பிடிப்பும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.