மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ உட்பட… அடுத்தடுத்து 2 படங்கள்! சிம்புவின் 50-ஆவது பட இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் சிம்பு, தான் நடிக்கும் படங்களின் கதைகளை நிதானமாக தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், இவரது  அடுத்தடுத்த படங்கள் மற்றும் இயக்குனர் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து… பல படங்களுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றவர் தான் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்த சிம்பு, பின்னர் ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கி தற்போது வரை கோலிவுட் திரையுலகில்… முன்னணி நடிகர் என்கிற சிம்மாசனத்தை பிடித்தது மட்டும் இன்றி, பல இளம் ரசிகைகளின் கனவு கண்ணனாகவும் வலம் வருகிறார்.

இவரை சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும், இவருக்கான மார்க்கெட் திரையுலகில் எப்போதும் குறைந்தது இல்லை. மாநாடு படத்தின் வெற்றிக்கு பின்னர் தன்னுடைய பட தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் சிம்பு… ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ‘தக் லைஃப் ‘ படத்தில் நடித்து வருகிறார். சிம்புவின் 48-ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. நேற்றைய தினம் கமல் தன்னுடைய டப்பிங் பணியை துவக்கினார். இதுகுறித்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்தது.இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு மலையாளத்தில் 2018 படத்தை இயக்கி… மிகவும் பிரபலமான இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய 50-ஆவது படமாக, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ள, ஹிஸ்டாரிக்கல் படத்தில் இணைய உள்ளார். சிம்புவின் 48-ஆவது படமாக உருவாக இந்த படம், ஒரு சில காரணங்களால்… தள்ளிப்போய் உள்ளது. அதே நேரம் சிம்பு தன்னுடைய 50-ஆவது படத்தில் இதுவரை பார்த்திடாத புதிய கெட்டப்பில் மட்டும் அல்ல அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும் ஒரு கதைக்களமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. 

WATCH OUR LATEST NEWS