கோலாலம்பூர், ஜூலை 30-
சமூகவலைத் தளத்தில் அறிமுகமான பெண்ணிடம், மூன்றாவது நாளிலேயே அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது ஆபாச வீடியோ படத்தை அனுப்பியதன் விளைவாக அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வரைலாக்கப் போவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
தம்மீது காதல் கொண்டிருப்பதாக நினைத்து, ஆபாசமாக தோற்றத்தை காட்டியதன் விளைவாக தற்போது அந்தப் படத்தையே ஆயுதமாக பயன்படுத்தி, அந்தப் பெண் தன்னை கதறவிட்டுள்ளார் என்று ஈப்போவைச் சேர்ந்த 47 வயதுடைய அந்த ஆடவர் இன்று ஈப்போ, மேடான் கோப்பெங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
முகநூலில் காணப்பட்ட அந்தப் பெண்ணின் அழகிய முகத்தை பார்த்து மனதை பறிகொடுத்து விட்டதாக கூறும் அந்த ஆடவர், கடந்த ஜுலை 27 ஆம் தேதி இரவு 11 மணியளவில் அந்த பெண்ணிடமிருந்து வீடியோ அழைப்பை பெற்றதாக குறிப்பிடுகிறார்.
நாம் காதலர்களாக இருப்பாதால் பிறந்த மேனியாக காட்சித் தருவது தவறியில்லை என்று கூறி, தம்மை கட்டாயப்படுத்தி ஆபாசமாக தோற்றம் தரும்படி அந்தப் பெண் கேட்டக்கொண்டதாக அவர் கூறுகிறார்.

அவ்வாறு தோற்றம் தந்தப்பின்னர் அடுத்த சில மணி நேரத்திலேயே அந்தப் படத்தை தனக்கு அனுப்பி வைத்து அந்தப் பெண், பணம் கேட்டு மிரட்டத் தொடங்கிவிட்டதாக அந்த ஆடவர் தெரிவித்துள்ளார்..
தமக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவம் குறித்து போலீசில் புகார் செய்து விட்டதாக தனது முகத்தை மறைத்த வண்ணம் செய்தியாளர்களிடம் பேசிய அந்த ஆடவர் நடந்த சம்பவத்தை மனம் திறந்து பேசினார்.

இதனிடையே இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய பேரா மாநில பாரிசான் நேஷனல் மக்கள் சேவை மற்றும் புகார் பிரிவின் த லைவர் முகமட் ரவி அப்துல்லா, இதுபோன்று SCAMMER வடிவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பில் தமது சேவை மையம் நிறைய புகார்களை பெற்று வருவதாக குறிப்பிட்டார்.
ஆபாசப் புகைப்படங்களை ஆயுதமாக பயன்படுத்தி இத்தகைய கும்பல், பணம் கேட்டு அச்சுறுத்தி வருகிறது. இத்தகைய குற்றவாளிகளை கண்டு பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று போலீஸ் துறையை அவர் கேட்டுக்கொண்டார்.