ஜூலை 30-
பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி, கொரிய அணியை வீழ்த்தி பதக்கத்தை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா 16-10 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் மனு பாகர்- சரப்ஜோத் சிங் ஜோடி 16-10 என்ற கணக்கில் தென் கொரிய ஜோடியான லீ வான்ஹோ – ஒ யே-ஜின்னை வீழ்த்தியது.
ஒ யே-ஜின்தான் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவு போட்டியில் தங்கம் வென்ற வீரங்கனையாவார்.
இது 2024 ஒலிம்பிக்கில் இந்தியா பெற்றுள்ள இரண்டாம் பதக்கமாகும்.
இந்த பதக்கத்தின் மூலம் ஒலிம்பிக்கில் இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத அரிய சாதனையை மனு பாகர் படைத்துள்ளார்.
இதன்மூலம், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை மற்றும் பெண் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் மனு பாகர்.
இதற்கு முன்பு சனிக்கிழமை நடந்த (ஜூலை 28) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவு போட்டியில், இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.